Friday, July 26, 2013


பழமொழி: அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்!


யதார்த்த பொருள்: அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (உதை) உதவும்.

பழமொழி கதை: ராமாயணத்தில், ராமன் கானகம் சென்றபோது.. பரதன் பின்சென்று ராமனை நாடாள அழைத்தான்.. ஆனால் ராமன் மறுத்தான். பின்னர் லக்ஷ்மணனை நாடாள அழைத்தான்.. ஆனால் லக்ஷ்மணனும் மறுத்தான். பின்னர்... ராமனை (அடி) படிந்து அவர்தம் பாதுகை பெற்று.. 14 வருடம் நல்லாட்சி செய்தான்.

உண்மையான பொருள்: பரதனுக்கு எப்படி அண்ணனும் தம்பியும் உதவாத இடத்தில் (திரு)அடி உதவியதோ அதேபோல் அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (அடி பணிதல், பணிந்து போதல்) உதவும்.

No comments:

Post a Comment